திங்கள், 28 ஜூன், 2010

பொருளாதார வளர்ச்சியை எட்ட சமநிலையான அணுகுமுறை.. -G20

நிதி பற்றாக்குறையை குறைக்கவும், பொருளாதார வளர்ச்சியை எட்டவும் சமநிலையான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும் என்று ஜி 20 நாடுகள் அறைகூவல் விடுத்துள்ளன.

கனடா தலைநகர் டொரன்டோவில் நடைபெற்ற ஜி 20 நாடுகளின் இரண்டு நாள் மாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்ட பிரகடனத்தில், பொருளாதார வளர்ச்சியை முடுக்கிவிடுவது மற்றும் நிதி பற்றாக்குறையை குறைப்பதில் ஜி 20 நாடுகள் சமநிலையான அணுக்முறையை கடைபிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


மேலும் வங்கி வரி தொடர்பான முடிவெடிப்பதை ஜி 20 ல் அங்கம் வகிக்கும் நாடுகளே முடிவு செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் தடையற்ற சர்வதேச வர்த்தகத்தை தொடர்வது மற்றும் பாதுகாத்தல் நடவடிக்கைகளிலிருந்து விலக்கி இருப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொருளாதார வளர்ச்சி மீண்டும் திரும்பிக்கொண்டுள்ள போதிலும் அது சமச்சீரற்ற நிலையிலும், பலவீனமான நிலையிலும் காணப்படுவதாக அதில் மேலும் கூறப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக