புதன், 21 ஜூலை, 2010

கைத்தொலைபேசி நீண்டநேரம் பாவிப்பதால் செவிப்புலன் இல்லாமல் போகலாம்

செல்போன் பயன்படுத்துவதால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்று உறுதியாக கூறமுடியாது. ஆனால் சமீபத்திய ஆய்வுகளில் செல்போனால் பல்வேறு பிரச்சினைகள் வர வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

நம்நாட்டில் பலர் தேவையில்லாமல் செல்போனில் அரட்டை அடிப்பதால் காது கோளாறில் சிக்கி அவதிப்படுகிறார்கள்.
சாதாரணமாக 70 முதல் 75 டெசிபல் வரையுள்ள சத்தங்களை தான் நம் காதுகள் கேட்க வேண்டும். அதிகபட்சமாக 90 டெசிபல் வரை உள்ள சத்தங்களை கேட்கலாம். ஒரு நாளுக்கு அதிக பட்சம் 4 மணி நேரம் அப்படிக் கேட்டால் பரவாயில்லை. அதுவும் விட்டு விட்டுத் தான் கேட்க வேண்டும். தொடர்ச்சியாக கேட்கக் கூடாது. அப்படி கேட்பதால் காதின் கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் செல்போன் உபயோகிக்கும் போது என்ன நிகழ்கிறது தெரியுமா?
சாதாரணமாகவே செல்போன் வழியாக 90 முதல் 100 டெசிபல் வரையுள்ள சத்தத்தைக் கேட்க வேண்டியுள்ளது. நம் காதுகளால் கேட்கக் கூடிய அதிக பட்ச ஒலி அளவை விட இது அதிகம். அதனால் காதுகளில் கேட்கும் திறன் நாளடைவில் குறையவும் வாய்ப்பு இருக்கிறது.
செல்போனில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை பேசினால் அவ்வளவாக பாதிப்பு இருக்காது. ஆனால் தொடர்ச்சியாக அரைமணி நேரம், ஒரு மணி நேரம் என்று பேசுவதால் கண்டிப்பாக பாதிப்பு ஏற்படும். காது மெஷின் பொருத்தும் அவசியம் ஏற்படும்.
தவிர, செல்போனில் இருந்து வெப்பமும், வெப்ப கதிர்வீச்சும் வெளிப்படுகிறது. நாம் செல்போனை காதுக்கு மிக அருகில் வைத்துப் பேசுவதால், இந்த வெப்பமும் கதிர்வீச்சும், நம் காதுக்கு உள்ளே இருக்கும் மிக நுண்ணிய நரம்புகளை பாதிக்க வாய்ப்புள்ளது. அதே போல செல்போனில் விட்டு விட்டு சிக்னல் கிடைப்பதால் கதிர் வீச்சின் அளவில் ஏற்ற இறக்கம் ஏற்படும். இந்த மாற்றத்தாலும் காது நரம்புகள் பாதிப்பு அடையலாம். நாளடைவில் தூரத்தில் ஹாரன் ஒலிப்பது, காற்றில் காலண்டர் அசைவது, பேனா கீழே விழுவது போன்ற சிறிய சத்தங்களைக் கூட கேட்க முடியாமல் போய் விடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக