சனி, 31 ஜூலை, 2010

இலங்கை இராணுவ உயர் அதிகாரியின் வாக்கு மூலம்....

தமிழீழ த்தேசியத்தலைவரின் இளைய புதல்வன் பாலசந்திரன் உட்பட கைது செய்யப்பட்ட போராளிகளை சிங்களப்படை சித்திரவதையின் பின்னர் கொன்றுள்ளதாக சிறிலங்கா இராணுவ அதிகாரி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அமெரிக்காவிடம் தஞ்சம் கோரிய இந்த அதிகாரி அங்குள்ள நீதிமன்ற நீதிபதி முன் நிலையில்
இந்த ஒப்புதல் வாக்குமூலத்தினை வழங்கியுள்ளார். இனப்படுகொலைக்கு எதிரான அமைப்பினரின் ஏற்பாட்டில் இந்த வாக்கு மூலம் பெறப்பட்டு 100 பக்க அறிக்கைகளாக தயாரிக்கபப்ட்டு வழங்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில்,தேசியத்தலைவரின் புதல்வன் பாலச்சந்திரன் 
சித்திரவதை செய்து கொல்லப்பட்டது.கொல்லப்பட்டவர்களது சடலங்களை தீமூட்டி எரித்தது.கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும்
 இளைஞர்களை கடத்தி சித்திரவதை செய்து கொலை செய்தது.
தமிழர் பிரதேசங்களில் இராணுவ குடியிருப்புக்களை திட்டமிட்டு அமைப்பது.


போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அதிகாரி தனது வாக்கு மூலத்தின் மூலம் ஏற்றுக்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக