சனி, 31 ஜூலை, 2010

ஊடகங்கள் மீது வன்முறை !!!போர் முடிந்தது என்ற சொல்லுக்கு என்ன ...???த.தே.கூ உறுப்பினர் மகிந்தவுக்கு முறையிட்டுள்ளாராம்..

யுத்தம் நிலவிய காலப்பகுதியில் பல்வேறு ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்ட அதேவேளை, ஊடகவியலாளர்கள் பலரும் கொல்லப்பட்டனர். ஆனால் யுத்தம் முடிவடைந்து சமாதான சூழல் ஏற்பட்ட பின்னரும் இவ்வாறு ஊடகங்களுக்கு எதிராக அராஜகங்கள் கட்டவிழ்த்து விடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.



இவ்வாறு வெற்றி ஊடக நிறுவனம் தாக்கப்பட்டமை தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இவ்விடயம் குறித்து ஜனாதிபதி உடனடியாகத் தலையீடு செய்து குற்றவாளிகளை அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அரியநேந்திரன் ஜனாதிபதியைக் கேட்டுள்ளார்.

1 கருத்து:

  1. பலே! கடிதம் எழுதுவதில் கருணாநிதியை மிஞ்சி விடுவீர்கள் போல் தெரிகிறதே!

    பதிலளிநீக்கு