சனி, 31 ஜூலை, 2010

“புலிகளின் பெயரைக் கறைப்படுத்துவதாக எண்ணி, தேசத்திற்காக மாண்ட தமிழர்களின் தியாகத்தை மறந்து விடாதீர்கள்”

தமிழர்களுக்காக கட்டப்பட்ட இராணுவக் கட்டமைப்பு, அழிக்கப்பட்ட நிலையில், அப்பிரதேசங்கள் அனைத்திலும் சிங்கள ஆக்கிரமிப்புக்கள் இடம் பெறுவதையும், ஒரே தேசத்திற்குள் அதாவது சிங்கள பிரதேசங்களில் தமிழ் பதாகைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில், தமிழ் பிரதேசத்தில் வலுக் கட்டாய
உட்செலுத்தல்கள் இடம் பெறுகின்றமையும், தமிழர்களின் நிலத்தில் தேவையற்ற “புத்தர்” சிலைகளை அமைப்பதும், தமிழ் சரித்திரத்தை ஒதுக்கி புதிய நினைவுச் சின்னங்களை அரசு சார்பில் அதிலும், சிங்கள பண்பாட்டில் அமைப்பது போன்றன முறையற்றது என்று தமிழர்களாகிய தங்களுக்கு யாரும் சொல்லித் தெரியவேண்டியவையல்ல!


இதற்கு “நாங்கள் என்ன செய்ய? என்று தகுதியுடையோர்களாகத் தெரிவாகியுள்ள தாங்கள் கையை விரிக்காதீர்கள்! தமிழ்ப்பிரதேசங்களில் சிங்கள சின்னம் ஒன்று அமைக்கப்பட்டால், சிங்கள அரசையும், சிங்கள அதிகாரிகளையும் குறைகூறுவதை விட்டுவிட்டு, போலி அறிக்கைகளை மட்டும் விடுவதை ஓரங்கட்டிவிட்டு, நிறைவேறாத வாக்குறுதிகளால் காலம் கடத்துவதைவிடுத்து, தங்களுக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி, தங்களுக்காக ஒதுக்கப்படும் நிதிகளைப் பயன்படுத்தி, அதனை எதிர்ப்பதற்கு வீண் விரயத்தைச் செலவழிப்பதிலும் பார்க்க, தமிழ்ப் பிரதேசங்களிலும் சிங்கள பிரதேசங்களிலும் தமிழ் சரித்திரச் சின்னத்தை ஒன்றிற்கு மேல் அமையுங்கள்! அப்போது சிங்கள மக்கள் அல்லது அரசு எதிர்ப்புத் தெரிவித்தால் அதன் காரணம் தமிழ்ப் பிரதேச ஆக்கிரமிப்புக்கள் நிறுத்தப்படுவது சட்டமாக்கப்படும்.


யாழில் இருக்கும் மணிக்கூட்டுக் கோபுரத்தை புனரமைப்பதோடு மட்டும் நின்றுவிடாது, இன்னும் பல தமிழர்களின் சாதனைகளையும், சரித்திரத்தையும் நிலைநாட்ட புதிய வடிவங்களை அமையுங்கள். இதற்கு அரச நிதி போதவில்லை என்றால், புலத்தில் பல தேசப்பற்றாளர்கள், தொழில் அதிபர்கள் போன்றோருடைய உதவியை நாடலாமே!


“புலிகளின் பெயரைக் கறைப்படுத்துவதாக எண்ணி, தேசத்திற்காக மாண்ட தமிழர்களின் தியாகத்தை மறந்து விடாதீர்கள்” என்பதனை இத்தால் வலியுறுத்த விரும்புகின்றோம்.


எமது உரிமைகளை சிங்கள அரசிடம் போராடி வெல்ல முடியாது என்பதற்காக, அரசியல் அணுகுமுறையிலும் கோட்டைவிட்டுவிடாதீர்கள். எனவே எமது மண்மீட்பின் நோக்கத்திற்காகப் போராடிய ஏராளம் தியாகிகள் வரலாற்றில் பதியவேண்டியவர்களாக இருக்கின்றபோது, அவ்வாறான “தேவர்களை” சரித்திரத்தில் இருந்து நீக்க தமிழர்களாகிய நீங்களே காரணிகளாக அமைந்து விடக்கூடாது மதிப்பிற்குரியவர்களே!


மதிப்பின் இலங்கை அதிபர் தகுந்த முறையில் சர்வதேசப்போக்கில் தனது இராஜதந்திரத்தைக் கையாள்வதை வேடிக்கைபார்த்துக் கொண்டிருக்காமல், இத்தனைகால அனுபவமே தங்களுக்கு (தமிழ் அரசியல்வாதிகளாக) ஏராளம் அனுபவத்தைக் கொடுத்திருக்கின்றதே!!! அது போதுமானதாக இருக்கின்றபோது, பதவிகள் காலாவதியாவதற்குள் தாங்கள் நிலைநாட்டக்கூடியதை நிலைநாட்டுங்கள் என்பதனை இத்தால் வலியுறுத்தப்படுகின்றீர்கள்

2 கருத்துகள்:

  1. இளைய புதல்வன் வேலணை31 ஜூலை, 2010 அன்று AM 5:21

    விடுதலை பேசி...தூ....எனக்காறித் துப்புகிறது மனச்சாட்சிஇந்தத் துப்புக்கெட்ட சாதிக்காகவாநீங்கள் சாகத்துணிந்ததும்....?சயனைட் அணிந்ததும்.....?

    பதிலளிநீக்கு
  2. தாய்லாந்தின் தமிழ் இளைஞன் ராஜ31 ஜூலை, 2010 அன்று PM 8:25

    ஜெனிவாவில் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது தமிழ்செல்வன் அவர்கள் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது ஜெனிவா வந்த அரசாங்க குழ பெரிய பைல் கட்டுகளை தூக்கிக்கொன்டு வந்தினம் என்றும் ஏன் அதை ஒரு சிடியில் ஏறிக்கொன்டு வந்திருக்கலாம் என்பது கூட விளங்கத புரியாத மோட்டு சிங்களவன் பல நாடுகளின் உதவியோடு ஒரு விடுதலை அமைப்பை ஒடுக்கிப்போட்டு கெட்டிகாரன் மாதிரி பிதட்டி திரிகிறான் அதைபோய் எங்கட தோட்டம் கொத்தினவையளும் சந்தையில் கூவிக்கூவி வியாபரம் செய்தவையளும் மாடு மேய்த்து திரிந்தவையும் அவைகளின்ட வாரிசுகளும் தான் இந்த புளுகை கேட்டு துள்ளி திரியினம்,புலிகல் இரகசியம் காப்பதில் உலகத்தில் நம்பர் ஒன் விடுதலை அமைப்பு, ஒருவேளை எதிரியை பைத்தியகாரன் ஆக்குவதுக்கு பொய்யான தகவல்களை தயாரித்து விட்டுவிட்டு ஏன் சென்றிருக்கக்கூடாது? இனி ஈழப்போராட்டம் ஈழத்தில் இல்லை உலகநாடுகளில் தான் இனி ஈழப்போராட்டம் ஆகையால் கிடைத்த தகவல்களை வைத்து மகிந்தாவும் அவரது அடிவரிடிகளும் சூப் வைத்து குடிக்கட்டும்,

    பதிலளிநீக்கு