சனி, 31 ஜூலை, 2010

பரிசோதனைக்கு தேவையான தர்சிகாவின் உடல் பாகங்கள் சில மாயமானது ஏன் ?

வேலணை அரசினர் வைத்தியசாலை யின் குடும்பநல மருத்துவமாது தர்சிகாவின் சடலத்தில் இருந்து அப்புறப்படுத் தப்பட்டதாகக் கூறப்படும் பரிசோதனைக்குத் தேவைப்படும் உடலின் குறிப்பிட்ட சில உறுப்புகளின் பாகங்களும் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பப்பட விருக்கின்றன.
கைதடி ஊற்றல் மயானத்தில் புதைக் கப்பட்டிருந்த தர்சிகாவின் சடலம்
கடந்த புதன்கிழமை தோண்டி எடுக்கப்பட்டு கொழும்புக்கு அனுப்பப்பட்டிருந்தது. கொழும்பு சட்டவைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி எஸ்.அல்விஸ் பிரேத பரிசோதனை நடத்தியபோது, சடலத்தின் உள் உறுப்புப் பாகங்கள் மாயமாகி இருந் ததை அறிந்துகொண்டார்.


அந்த உள் உறுப்புக்களையும் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தால் தான் பூரணமாக அறிக்கையைச் சமர்ப்பிக்க முடியும் என்றும் அந்த உடற்பாகங்களைக் கண்டு பிடித்து அனுப்பிவைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டிருந்தார்.


அதைத் தொடர்ந்து, பிரேத பரிசோதனை முடிவடைந்த பின்னர் அந்தச் சடலத்தின் உள் உறுப்புக்களை அகற்றிப் பதப்படுத்திய ("எம்பா மிங்' செய்த) சிற்றூழியர்கள் இருவரைப் பொலிஸார் விசாரணை செய்தனர்.


அவர்களின் தகவலின் பேரில் கொட்டடி மீன் சந்தைக்கு அருகில் புதைகுழி ஒன்றில் இருந்து துணியில் கட்டப்பட்ட நிலையில் அந்த உடல் உறுப்புப்பாகங்கள் மீட்கப்பட்டன. அவை தற்போது யாழ். போதனா மருத்துவமனையில் பாதுகாக்கப்படுகின்றன.குறித்த சிற்றூளியர்கள் இருவரும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முன்நிலைப்படுத்தப்பட்டு வாக்கு பதியப்பட்டன.


இருவரும் மதுபோதையில் இருந்ததால் முரண்பாடாக வாக்குமூலம் அளித்ததை அடுத்து, வாக்குமூலம் பெறுவதைத் திங்கள் வரை ஒத்திவைத்த நீதிவான் அதுவரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தர விட்டார்.


இருவரின் வாக்குமூலங்களை நாளை மறுதினம் திங்கட்கிழமை பதிவு செய்த பின்னரே தர்சிகாவின் உடல் உறுப்புப் பாகங்கள் கொழும்புக்கு அனுப்பப்பட விருக்கின்றன.


அதேவேளை மரபணுப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கோரி மனு ஒன்றும் திங்கட்கிழமை தாக்கல் செய்யப்படவிருக்கிறது.


இந்த வழக்கில் பாதிக்கப்பட்டோர் சார்பில் மனித உரிமை இல்லத்தைச் சேர்ந்த சட்டத்தரணி எஸ்.குகனேஸ்வரன் சட்டத் தரணி நிரஞ்சினி இரத்தினசிங்கத்தின் அனு சரணையுடன் ஆஜரானார்.


இதேவேளை பிரேத பரிசோதனைக்காக கொழும்புக்கு எடுத்துச் சென்று மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ள தர்சிகாவின் சடலம் நேற்று காலை 8.45 மணியளவில் கைதடியில் அதே மயானத்தில் அதே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக