புதன், 24 மார்ச், 2010

பாலிதா கோஹனவிற்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கையை ஐ.நா மேற்கொள்ளலாம்?

12ஆம் தேதி நியூயார்க்கில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறிலங்காவைச் சேர்ந்த 16 பேர் பங்கு பெற்றனர். அமெரிக்காவில் உள்ள சிறிலங்கா தூதரகம் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் மத்திய உணவும் 100 அமெரிக்க டாலர்கள் பணமும் வழங்கப்பட்டது. ஆலோசனை குழுவின் மூலம் கோஹனவின் குற்றம் நிருபிக்கப்பட்டால் எதிர் காலத்தில் சர்வதேச அளவில் எந்த செயலகத்திலும் அவர் பணியாற்ற முடியாது என ஐக்கிய நாடுகள் அமைப்பில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் - கி - மூனுக்கு எதிராக நியூயார்க் நகரில் சிறிலங்காவின் ஒரு குழுவினர் அண்மையில் ஆர்ப்பாட்டங்களை நடாத்தியிருந்தனர். அதற்கு ஏற்பாடு செய்ததற்காக ஐ. நா. வுக்கான சிறிலங்கா நிரந்தர பிரதிநிதியான பலிதா கோஹன [Palitha Kohona] மீது ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பு தீர்மானித்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் அமைத்திருக்கும் இந்த ஒழுங்கு முறை ஆலோசனை குழுவில் இந்தியா மற்றும் சீனாவை சார்ந்த பிரதிநிதிகள் இடம் பெற மாட்டார்கள் எனத் தெரிகிறது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறிலங்கா குழுவிற்கு கோஹன மலர்கொத்து கொடுத்த போது எடுக்கப்பட்ட ஒளிப்படம் வெளியான பிறகே இந்த ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபை தீர்மானித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக