புதன், 24 மார்ச், 2010

மரணித்த மனித நேயம் மனித எச்சம் தேடுகிறது

உலக மண் எங்கும் ஓயாது ஒலித்தோம். மண்ணின் சோகத்தை மனம் வெம்ப சொல்லி நின்றோம். எவருமே செவி சாய்க்கவில்லை ஒன்ரறை மாத காலம். ஒருவரும் காணாக் கோலம். நான்கு லட்சம் மக்கள் என்றோம். நாதி அற்ற நிலை என்றோம். பாதி கூட நோக்கவில்லை. பச்சாதாபம் காட்டவில்லை. பதைபதைக்க பல கொலைகள். படைத்து விட்ட சிங்களமும். துணை புரிந்த வல்லரசுகளும். ஏன் அங்கு போகின்றார்கள் மிச்சம் ஏனும் காக்காமல். எச்சம் தேடி என்ன பலன்? தப்பி ஒடி வந்தவருக்கும். தரம் பிரித்த தடுப்புக்காவல் எட்டுப்பட்டு முட்கம்பி வேலி. ஏந்தி நிற்கும் துப்பாக்கி தாரர். எவர் வருவார் எவர் வருவார். எம்மை எவர் மீட்பார்? ஏக்கம் கொண்ட நெங்சங்கள் வழியை வழி பார்த்து கண்கள் பூத்து நிற்கும் காட்சிகள் பார்த்தும் கருணை கொள்ளா உலகம் கண்னை மூடி இருந்து விட்டு கறை படிந்த நிலத்தில் துடைத்து அழித்த தடயம் தூர்வை செய்து பலன் என்ன? கணக்கில்லா வதை முகாம்கள் கண்காணா இடங்களில் அங்கே கண் விழித்து தேடு உலகே மரணித்த மனித நேயம் உயிர்க்கட்டும். -webdunia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக