ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

தும்புத்தடியை வைத்தாலும் கூட்டமைப்புக்கே மக்கள் வாக்களிப்பார்கள்

ஒரு தும்புத் தடியைத் தூக்கி வைத்து இது தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றால் அதனைத் தான் பெரும்பாலான மக்கள் தொடர்ந்தும் நம்புகிறார்கள். இதனை மாற்ற முடியாது என்பதனை இப்போது புரிந்து கொண்டேன். ஆளும் ஐ.ம.சு.கூட்டமைப்பு வேட்பாளரும் முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர்காமர் தங்கேஸ்வரி தெரிவித்தார். தேர்தல் காலத்தில் எனது மாவட்டமான மட்டக்களப்பில் எனக்கு இருந்த செல்வாக்கைப் பார்த்தபோது நான் தான் இந்த மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவேனென நினைத்தேன்.அதுதான் உண்மையும்.ஆனால், என்ன நடந்தது..? வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளில் பலர் நடந்து கொண்ட விதம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் குளறுபடி செய்து எனது வெற்றியை இல்லாமல் செய்து விட்டார்கள். அவர்கள் என்னைத் திட்டமிட்டு நீக்கிவிட்டார்கள். இது தொடர்பில் நான் தேர்தல் ஆணையாளருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்துக்குப் பொறுப்பான தேர்தல் அதிகாரிகளுக்கும் உடனடியாகவே அறிவித்திருந்தேன். இருப்பினும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விடயம் தொடர்பில் நான் வழக்கு ஒன்றினையும் விரைவில் தாக்கல் செய்யவுள்ளேன். அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெற வைப்பதிலேயே முனைப்பாக இருந்தனர். எனக்கு அளிக்கப்பட்ட வாக்குகளுக்கு என்ன நடந்தது? மங்களகம என்ற சிங்களக் கிராமத்தில் கூட எனக்கு மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் அளிக்கப்பட்டதாக எனக்குத் தகவலும் கிடைத்திருந்தது. ஒரு தும்புத் தடியைத் தூக்கி வைத்து இதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று கூறினாலும் மக்கள் அதனை நம்பி அவர்களுக்கே வாக்களித்து வந்தனர். இந்த நிலையை மாற்ற வேண்டுமென்றே புறப்பட்டேன். ஆனால், அது நடக்க வில்லை. ஒரு தும்புத் தடியைத் தூக்கி வைத்து இது தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றால் அதனைத் தான் பெரும்பாலான மக்கள் தொடர்ந்தும் நம்புகிறார்கள். இதனை மாற்ற துடியாது என்பதனை இப்போது புரிந்து கொண்டேன். இது தவிர, இன்னும் சில விடயங்களைக் குறிப்பிடுகிறேன். படுவான்கரையிலுள்ள பெரியபுல்லுமலை என்ற பிரதேசத்தை எடுத்துப் பாருங்கள். இந்தப் பகுதிகளில் எல்லாம் மேலோட்டமான அரசாங்கம் அபிவிருத்தியும் தான் காணப்படுகிறது. ஆனால், உள்ளே ஒன்றுமே இல்லையே? கட்டுமுறி என்ற கிராமத்துக்குச் சென்று பார்த்தபோது அரசாங்கம் பல விடயங்களை வெறும் அறிக்கைகள் மூலம்தான் செய்து வருகிறதென்பதனையும் என்னால் புரிந்து கொள்ளக் கூடியதாகவிருந்தது. கஷ்டப்பட்ட மக்களுக்குத் தேவை அபிவிருத்தி தான். அதனை அரசு செய்தாலும் சரிதான் மாகாண சபை செய்தாலும் சரிதான். ஆனால் உள்ளே எல்லாம் ஓட்டையாக அல்லவா உள்ளன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக