ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

சூரியன் தொடர்பான புதிய படங்களை நாஸா வெளியிட்டுள்ளது

சூரியன் தொடர்பான புதிய படங்களை நாஸா விண்வெளி ஆய்வு மையம் அண்மையில் வெளியிட்டுள்ளது. அதிஉயர் தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன கமரக்களினால் குறித்த படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சூரியனில் பல்வேறு வெடிப்புக்கள் இடம்பெற்று வருவதாகவும், வாயு வெளியேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளைப் பயன்படுத்தி சூரிய சக்தி மற்றும் சூரிய குடும்பம் பற்றிய புதிய ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என நாஸா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. சோலர் டைனமிக் ஒப்சர்வேர்ட்டி எனப்படும் விசேட கமராவைக் கொண்டு சூரியனின் படங்கள் எடுக்கப்பட்டுள்ளதகாவும், ஐந்து வருடங்களுக்கு இந்த கமரா படங்களை விநியோகிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், சூரியன் பற்றிய ஆய்வுகளை பூரணப்படுத்த இன்னும் நீண்டகாலம் தேவைப்படும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறித்த கமரா மிகவும் துல்லியமான படங்களை பல கோணங்களிலிருந்து எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக