ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

மனித உரிமை மீறல்களையும் இனப்படுகொலைகலையும் ஏற்றுக்கொள்கிறவர்கள் கலைஞர்கள் இல்லை.


மனித உரிமை மீறல்களையும் இனப்படுகொலைகலையும் ஏற்றுக்கொள்கிறவர்கள் கலைஞர்கள் இல்லை. இவை அனைத்தையும் உலகிற்கு எடுத்து செல்பவர்கள் தான் உண்மையான மக்கள் கலைஞர்கள் குர்திசு இன மக்களின் விடுதலைக்காக போராடிய ஒச்சலான் கைது செய்யப்பட்டபோதும்,ஸ்பெயின் சர்வாதிகாரி பிராங்கோவுக்கு எதிராக போராடியதும் வியட்நாமிய யுத்தத்திற்கெதிராக குரல்கொடுத்ததும்,இலத்தீன அமெரிக்கப் புரட்சியில் கலந்து கொண்டதும்,கலைஞர்கள் தான் இன்னும் சொல்ல போனால் இட்லரின் செய்கைகளை தன்னுடைய திரைபடங்களின் மூலம் வெளிபடுத்தியவர் சார்லின் சாப்லின். இதே வழியில் வந்த கலைஞர்கள் இன்று ஒரு இனபடுகொலையை,மாபெரும் மனித அவலத்தை நடத்திய இலங்கை இனவெறி அதிபர் கொடுங்கோலன் ராஜபக்சவுக்கு துணை போக போகிறார்களா? இரண்டு லட்சம் மக்களை கொன்றொழித்தது மட்டுமில்லாமல் இன்றும் முள்வேலி முகாமிற்க்குள் பல ஆயிரக்கணக்கான தமிழர்களை அடைத்து வைத்து அடிப்படை வசதிகூட செய்து கொடுக்காமல் ,அங்கு தமிழ் பெண்களை இலங்கை ராணுவத்தினர் மூலம் பாலியியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கி இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்களை நிரந்தர ஊனமாக்கி மனித நேயம் உள்ள எந்த மனிதனும் ஏற்று கொள்ள முடியாத செயல்களை செய்த செய்து கொண்டு இருக்கிற இலங்கை இனவெறி அதிபர் கொடுங்கோலன் ராஜபக்ச தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களை தடுக்க எவ்வித முன்னெடுப்புகளையும் மேற் கொள்ளவில்லை என்பதையும் தொடர்ந்து போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங் களையும் ,போரின் இறுதி காலங்களில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு நீதி பெற்றுத் தரவேண்டிய தார்மீக பொறுப்பை UN நாடுகள் மற்றும் அவை யின் உறுப்பு நாடுகளுக்கு நிறை வேற்றாது விட்டன.என்று நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் கூறுகிறது இந்த தீர்ப்பை ராஜ பக்சே மதிக்க வில்லை ஏனென்றால் அவரோடு துணை போவதற்கு சில நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. 400க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய மீனவர்கள் இந்திய கடல் எல்கையில் இலங்கை கடற்படையினரால்சுட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள். கொல்லப்பட்ட மீனவர்களின் நீதிக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் இந்திய அரசின் வழக்கறிஞர் “சர்வதேச கடல் எல்லையில் கொல்லப்பட்ட மீனவனுக்காக இந்தியா பொறுப்பேற்க முடியாது ” என்கிறார். அவர்கள் இந்திய எல்லையில்தான் கொல்லப்பட்டார்கள் என்பதற்கான ஆதாரம் அளிக்கப்பட்ட போது “ இதற்காக இலங்கையின் மீது போரா தொடுக்க முடியும்” என்றும் பதிலளிக்கிறார். மேலும் இந்திய தமிழக கடலோர எல்லை பகுதிகளில் இந்தியா எதிரியாக நினைக்கும் சீனா,பாகிஸ்தான் போன்ற நாடுகள் காலுன்றி விட்டன. இவர்கள் என்றுமே இலங்கையின் மிக நெருங்கிய நண்பர்கள். இப்படி எல்லாவிதத்திலும் இந்தியாவிற்கு எதிராக செயல் படும் இலங்கைக்கு எதற்கு பல மில்லியன் டாலர்களை பெற்றுத்தரும் சர்வதேச இந்தியத்திரைப்பட விழா ? என்பதுதான் கேள்வி சர்வதேச இந்தியத்திரைப்பட விழா துபாயில் நடந்த பொழுது துபாய்க்கு நேரடியாக கிடைத்த வருமானம் 19 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.இதனால் துபாயின் சுற்றுலாத்துறை வருமானம் ஒரு வாரத்தில் 30% அதிகரித்தது. இதே போன்றுதான் இங்கிலாந்தில் யார்க்ஷயரிலும் நடந்தது. அயர்லாந்தில் உள்ள டப்ளினில் இந்த விழா நடந்தால் அயர்லாந்திற்கு 800 மில்லியன் வர்த்தக வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.இத்தகைய காரணங்களினால்தான் தென்கொரியா, கனடா, அயர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இந்த விழாவை தங்கள் நாட்டில் நடத்துவதற்காக போட்டிபோடுகின்றன. இதே வேளையில் ராஜபக்சேவின் நல்வாழ்விற்காக கொழும்புவில் விழா நடத்தத் துடிக்கும் இந்திய அரசாங்கமும், அதிகார வர்க்கமும் தமிழ்மக்களையும் தமிழகமக்களின் உயிரை உண்ர்வை துச்சமாக மதிக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக