ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

சிவில் நிர்வாகம் இன்னமும் சிங்கள மொழியில் !

வடபகுதியில் காவல்துறை நீதி நிர்வாகத்துறை ஆகியன முழுமையாக சிங்கள மொழியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் தமிழ் பொதுமக்களது வாக்கு மூலங்கள் சிங்களமொழியில் பெறபட்டு வருவதாகவும் இதனால் சிங்களமொழி தெரியாத பெரும்பாண்மை தமிழ் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகவும் தெரியவருகிறது. யாழ் மாவட்ட நீதி மன்றங்கள் இதுதொடர்பில் சிறீலங்கா காவல்துறையினருக்கு அறிவுறுத்தியபோதும் அவர்கள் இதனை புறக்கணிப்பதாக தெரியவருகிறது. வடபகுதியில் கடமையாற்றும் காவல்துறையினருக்கு தமிழ்மொழி தெரியாததும் இங்கு தமிழ்மொழி தெரிந்த அதிகாரிகளை நியமிப்பதாக அரசு தெரிவித்தபோதும் எதுவுமே நடைபெறவில்லை என்பதுவும் சுட்டிக்காட்டத்தக்கது. இதேநடைமுறையே கிழக்கிலும் காணப்படுவதாக தெரியவருகிறது. இதேவேளை வடபகுதி காவல்துறை அதிகாரி தமிழ் காவல்துறை அதிகாரிகளை நியமிப்பதுதொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளார். வடபகுதியில் தமிழ்காவல்துறை அதிகாரிகளை நியமிக்கும் நோக்குடன் விண்ணப்பங்களை கோரியிருந்தபோதும் பலர் விண்ணப்பித்தநிலையில் அரசு பின்னர் அதனை கைவிட்டுள்ளதாக தெரியவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக