ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

“நம்பிக்கை ஒளி” – புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தாயக உறவுகளுக்கு கரம் கொடுக்கும் அரிய திட்டம்(RAY OF HOPE)

தாயகத்தில் போரினாலும், இயற்கை அனர்த்தங்களாலும் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களிற்கு புலம்பெயர்ந்த மக்கள் நேரடியாக உதவி செய்யும் வகையில் “நம்பிக்கை ஒளி” என்ற திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களிற்கு (பயனாளிகளுக்கு) புலம்பெயர்ந்த உறவுகள் நேரடியாக தமது உதவிகளை வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருக்கும் அதேவேளை, பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உளவளத்தினை மேம்படுத்தும் அரிய வாய்ப்பினையும் பெற்றுக்கொள்ளுகின்றனர். புலம்பெயர் நாடுகளில் நியமிக்கப்பட்டுள்ள இணைப்பாளர்கள் மூலம் தாயகத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் விபரங்களைப் பெற்று, அவர்களுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்தி, புலம்பெயர்ந்த மக்கள் உதவி செய்ய முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக “நம்பிக்கை ஒளி” இணைப்பாளர்கள் வெளியிட்டுள்ள விபரக்கோவையின் உள்ளடக்கம் கீழே தரப்பட்டுள்ளது. நம்பிக்கை ஒளி இலங்கைத்தீவில் தமிழினம் கொடும் யுத்தத்தினால் காலம் காலமாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. கடந்த மே 2009இல் நடைபெற்ற யுத்த அழிப்பினால் காலகாலங்களுக்கும் மாறமுடியாத பேரழிவைத் தமிழினம் சுமந்து கொண்டிருக்கிறது. தற்போது உறவினர்களை இழந்தும் உடமைகளை இழந்தும் தமிழினம், சீர்குலைக்கப்பட்டு சிதைந்துள்ளது. இவ்வாறு சிதைக்கப்பட்டு முகாம்களிலும், வைத்தியசாலைகளிலும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் அத்தியாவசிய தேவைகள் கிடைக்கப் பெறாமலும், மீளக்குடியமர்த்தப்படாமலும் தங்கள் சொந்த நிலங்களில் உணவு, உடை, வாழ்விடம், மற்றும் வாழ்வாதார நம்பிக்கைகள், தொழில் வாய்ப்புகள் எதுவுமில்லாமல் வாழ்கின்றனர். “இவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தியாக்கவும், உளவளத்தினை மேம்படுத்தவும், சிதைந்து, பிரிந்த உறவுகளைத் தொடர்புபடுத்தவும் புலத்தில் உருவாக்கம்பெற்றுள்ள நிறுவனமே நம்பிக்கை ஒளி (RAY OF HOPE).” இதன் முதலாவது திட்டம் “ஒரு குடும்பம் ஒரு தேசம்”( CONNECTING FAMILIES) என்னும் திட்டம் உருவாக்கம் பெற்றுள்ளது. போரின் பேரவலத்திலிருந்து தம்மை மீட்டு வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான உடனடி உதவிகளை எதிர்பார்த்து பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தற்போது தமிழர் தாயகத்தில் உள்ளனர். உள்நாட்டில் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி தமது சொந்த இடங்களுக்கு மீளச் செல்லும் நிலையில் இந்த எண்ணிக்கை இன்னமும் அதிகரிக்கலாம் என நம்பப்படுகின்றது . தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள தமிழ் மக்களின் உடனடித் தேவைகளை அடையாளம் கண்டு அதற்கான உதவியை வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். திட்ட முன்னோட்டம் புலம்பெயர்ந்த நாட்டிலுள்ள குடும்பம் ஒன்றுடன் தாயகத்தில் உள்ள ஒரு பாதிக்கப்பட்ட குடும்பத்தை இணைத்து விடுவதன் மூலம் எமது உறவுகளுக்கான, உதவிகளை நேரடியாக வழங்குவதுடன் அவர்களுக்கான உளவள ஆலோசனைகள், மற்றும் உதவிகளை வழங்குதலே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும். முகாம்களில் இருந்தும் மருத்துவமனைகளில் இருந்தும் வெளியேறியுள்ள மக்கள் தமது வாழ்வாதாரத்தை மீளத் தொடங்குவதற்கான ஒரு வழிமுறையாக இதைப் பார்க்கலாம். தெரிவு செய்யப்பட்ட குடும்பங்கள் அனைத்தும் போரினால் தமது குடும்ப அங்கத்தவர்கள் பலரை இழந்தவர்களாகவும், குடும்பத்தலைவர்களை இழந்தவர்களாகவும், போரினால் உடல் உறுப்புக்களை இழந்தவர்களாகவும், தமது சொத்து உடைமைகளை இழந்து நிர்க்கதியாக உள்ளவர்களாகவும் உள்ளனர். திட்ட முன்னோட்டம் புலம்பெயர்ந்த நாட்டிலுள்ள குடும்பம் ஒன்றுடன் தாயகத்தில் உள்ள ஒரு பாதிக்கப்பட்ட குடும்பத்தை இணைத்து விடுவதன் மூலம் எமது உறவுகளுக்கான, உதவிகளை நேரடியாக வழங்குவதுடன் அவர்களுக்கான உளவள ஆலோசனைகள், மற்றும் உதவிகளை வழங்குதலே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும். முகாம்களில் இருந்தும் மருத்துவமனைகளில் இருந்தும் வெளியேறியுள்ள மக்கள் தமது வாழ்வாதாரத்தை மீளத் தொடங்குவதற்கான ஒரு வழிமுறையாக இதைப் பார்க்கலாம். தெரிவு செய்யப்பட்ட குடும்பங்கள் அனைத்தும் போரினால் தமது குடும்ப அங்கத்தவர்கள் பலரை இழந்தவர்களாகவும்,குடும்பத்தலைவர்களை இழந்தவர்களாகவும், போரினால் உடல் உறுப்புக்களை இழந்தவர்களாகவும், தமது சொத்து உடைமைகளை இழந்து நிர்க்கதியாக உள்ளவர்களாகவும் உள்ளனர். நிர்வாக ஒழுங்கு நம்பிக்கை ஒளி நிறுவனம் அந்தந்த நாடுகளில் உள்ள மக்கள் கட்டமைப்புக்களுடனும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடனும், தனிநபர்களுடனும் இணைந்து செயற்படும். புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள மக்கள் கட்டமைப்புக்கள். தன்னார்வத்தொண்டு நிறுவனங்களின் பங்காக:- •இத்திட்டத்தில் பொதுவான தகவற் தொடுப்பில் இருந்து குடும்பங்கள் மற்றும் தனிநபர்களின் பெயர்களையும் விபரங்களையும் எடுத்து தாங்கள் வாழும் நாடுகளில் உள்ள உதவிசெய்ய விரும்பும் குடும்பத்திடம் வழங்குதல். •உதவி வழங்கிவரும் ஒருவரால் தொடர்ந்து உதவி செய்ய இயலாதவிடத்து அதை மீளத் தொடுப்பில் இணைத்துக் கொள்ளுதல். இந்த முயற்சிக்கு முழுமையான பங்களிப்பையும் வழங்கி உதவி வழங்குபவர்களையும் பெறுபவர்களையும் இணைத்து விடுதல். உதவி வழங்குவதற்கான தகுதிகள் என்ன? •18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல். •மாதாந்தம் ஒரு குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளுக்கு உதவி கொடுக்கக் கூடியவராக இருத்தல். •பணம் பெற்றுக் கொள்ளும் குடும்பத்தைச் சென்றடைந்ததா என்பதை உறுதி செய்வதற்கான தொலைபேசித் தொடர்பாடலை மேற்கொள்ளக் கூடியவராக இருத்தல். ஐயங்களும் பதில்களும் நாங்கள் தெரிவு செய்யும் குடும்பத்திற்கு எவ்வாறு உதவி புரியலாம்? நீங்கள் தெரிவு செய்த குடும்பத்தின் நிலை, அக்குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை, அவர்களின் தேவை (உணவு, உடை, உறையுள், வைத்திய செலவு) போன்றவற்றினைப் பொறுத்து மாதாந்தம் ஒரு தொகையை வழங்கலாம். இந்தத் திட்டத்தின் பயனாளிகள் யார்? •தாயகத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்குமானது. •உறவுகளை இழந்த சிறுவர்கள் •மாற்றுவலு உள்ளோர் •கணவனை இழந்தோர் •ஆதரவு இல்லாத முதியவர்கள் •வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் உதவிப் பணம் வழங்குதல் மற்றும் பெற்றுக் கொள்ளுதலுக்கு எந்த நிறுவனம் இடை நிலையில் இருக்கிறது? உதவிப் பணக் கொடுப்பனவில் பயன்பெறுவோருக்கு இடையில் எந்த நிறுவனமோ அல்லது தனி மனிதரோ இருக்கப் போவதில்லை. உதவிப் பணம் கொடுப்பவரும் உதவி பெறுபவரும் நேரடித் தொடர்பின் மூலம் இவ் உதவியினைப் பரிமாறிக் கொள்வர். இந்தத் திட்டத்தில் யார் பங்குபற்றுகின்றனர்? புலம்பெயர் மக்கள் கட்டமைப்புக்கள், தமிழ் ஊடகங்கள், ஊர்ச்சங்கங்கள், தமிழ் பாடசாலைகள், பழைய மாணவர் சங்கங்கள், சமய அமைப்புகள், மாணவர் அமைப்புகள், விளையாட்டு ஒன்றியங்கள் போன்றவை இத்திட்டத்தில் நம்பிக்கை ஒளியுடன் இணைந்து செயலாற்றும். பாதிக்கப்பட்ட குடும்பங்களை “நம்பிக்கை ஒளி” எவ்வாறு அடையாளம் காண்கின்றது? தாயகத்தில் உள்ள நலன்புரிச் சங்கங்கள், சமய நிறுவனங்கள் மற்றும் உதவி நிறுவனங்கள், தனிநபர்களின் உதவியோடு பெறப்படும் உதவி நாடுவோரின் விபரங்கள் பரிசீலனைக்கு உட்படுத்தி மத்திய தரவுத் தொடுப்பில் இணைக்கப்படும். நாங்கள் உதவி செய்து கொண்டிருக்கும்போது சில சந்தர்ப்பங்களில் தொடர்ந்து எங்களால் உதவ முடியாது போனால் என்ன செய்யலாம்? அப்படியான சூழ்நிலை வரும்போது மீண்டும் அக்குடும்பம் சர்வதேச ரீதியில் ஒருங்கமைக்கப்பட்ட தகவல் தொடுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டு பதியப்படும். உங்களைப் போன்ற யாராவது பின்னர் அக் குடும்பத்தினைத் தெரிவு செய்யலாம். எனது குழந்தைக்கு 4 வயது. அதே வயதுள்ள ஒரு குழந்தை உள்ள ஒரு குடும்பத்துக்கான உதவியை நான் செய்வதற்கு விரும்புகின்றேன். இது சாத்தியமா? நீங்கள் எத்தகைய குடும்பத்துக்கு உதவி செய்ய விரும்புகிறீர்கள் என்னும் விபரத்தை அந்தந்த நாடுகளில் இத்திட்டத்தினை முன்னெடுக்கும் அமைப்புக்களில் நீங்கள் கொடுத்தால் அதற்கு ஒத்த குடும்பத்தைத் தெரிவு செய்து எம்மால் வழங்க முடியும். இத் திட்டத்தில் இணைந்து உதவி வழங்குவதால் சட்டச் சிக்கல்கள் ஏதும் ஏற்படுமா? நீங்கள் செய்யப் போகும் உதவி உங்கள் குடும்ப அங்கத்தவர் ஒருவருக்கு நீங்கள் செய்யும் உதவி போன்றது. நீங்களே நேரடியாகத் தொடர்பு கொண்டு அந்தக் குடும்பத்துக்கு உதவப் போகின்றீர்கள். எந்தவித சட்டச் சிக்கல்களும் இதில் வருவதற்கில்லை. நிதி உதவி ஒவ்வொரு மாதமும் உரியவர்களைச் சென்றடையும் என்பதை நம்பிக்கை ஒளி எவ்வாறு உறுதிப்படுத்தும்? மேற்குறிப்பிட்ட பொதுநல அமைப்புக்களைச் சேர்ந்தோர் தாயகத்தில் உதவிபெறும் மக்களிடம் நேரடியாக மாதாந்தம் உதவி சென்றடைவதை உறுதி செய்து கொள்வார்கள். அப்படி உதவி சென்றடையாதவிடத்து அவ்விடத்தில் உள்ள இவர்கள் மூலம் தகவல் எமக்குத் தெரிவிக்கப்படும். நம்பிக்கை ஒளி நிறுவனத்தின் ஊடாகப் பெறப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் கிடைக்கப்பெற்ற விபரங்களிலிருந்து எவ்வளவு பேர் பயன்பெற்றுள்ளனர்? தற்போது 418 பயனாளிகள் புலத்தில் உள்ள குடும்பங்களுடன் இணைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து எத்தனை காலத்துக்கு நிதியுதவியை மாத்திரம் மக்களுக்குக் கொடுப்பது என்பது இந்தத் திட்டத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது? தற்போது எமது மக்கள் எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் தங்களுக்கென்று எந்தவித வருமானமுமின்றி உள்ளார்கள். அவர்களின் அத்தியாவசிய தேவைகளை வழங்குவது இந்தத் திட்டத்தின் முதற்கட்ட நிலையாகப் பார்க்கலாம். தொடர்ந்து எமது மக்களின் தேவைகளுக்கு ஏற்ப சுயதொழில் அல்லது தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களின் வாழ்வை மேம்படுத்துவதே எமது எதிர்காலத்திட்டமாகும். புலம்பெயர்ந்து வாழும் அனைத்து உறவுகளும் இத்திட்டத்தில் இணைந்து எம்முறவுகளுக்கு நம்பிக்கையொளியேற்றுவோம். நிர்வாகம் நம்பிக்கை ஒளி தொடர்புகளுக்கு: 0044 2033769352 Email – iniyavan@rohmay2009.com Email – kavian@rohmay2009.com திட்ட ஒருங்கிணைப்பு - கே.ஜே. அருள்நேதன் kj.nathan@rohmay2009.com தொலைபேசி – 001 416 670 4220 நாடுகள் வாரியான தொடர்பாளர்கள் கனடா – ஏ. காந்தன் தொலைபேசி – 001 416 659 5196 kanthan@rohmay2009.com பிரித்தானியா – பி. சிறீகாந்த் 0044 79479 52773 யேர்மனி – எஸ். சிறீசங்கர் – 0049 176 248 37466 பிரான்ஸ் – பி. தனம் visu@rohmay2009.com ஹொலன்ட் – எஸ். ஜஸ்லின் 0031 634397002 அனைத்து நாடுகளிலிருந்தும் நம்பிக்கை ஒளி நிறுவனத்தோடு இணைந்து செயற்பட அனைவரையும் அழைக்கின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக