வெள்ளி, 23 ஜூலை, 2010

விபுலானந்தரின் 63ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட தமிழ் செம்மொழிவிழாவில் தமிழ் ஊடகவியலாளர்களும் கிழக்கு மாகாண கல்விமான்களும் புறக்கணிக்கபட்டுள்ளனர் ...

கிழக்கு மாகாணத்தின் முதுபெரும் கல்வி அறிஞராக இருந்து இறுதி மூச்சுவரை தமிழுக்கு தொண்டாற்றிய சுவாமி விபுலானந்தரின் பிறந்த மண்ணில் நடந்த இந்த விழாவில் அதே மாகாண மண்ணில் தோன்றிய கல்விமான்களுக்கு அழைப்பு விடுக்கப்படாமை தொடர்பில் கடும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த நிகழ்வு தொடர்பில் ஏற்பாடுகளை மேற்கொண்டுவந்த காரைதீவை சேர்ந்த ஊடகவியலாளர் சகாயதேவராஜாவின் எழுந்தமான நடவடிக்கைகளே இவற்றுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிகழ்வுக்கு அப்பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும் ஏனைய தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லையெனவும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனினும் அழைப்பு கிடைக்காமை தொடர்பில் கருத்தில்கொள்ளாமல் செய்திசேகரிக்கச்சென்ற ஊடகவியலாளர்களுக்கு ஆசனம் எதுவும் கொடுக்காமல்,தண்ணீர் கூட வழங்காமல் புறக்கணிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒரு சமுகத்தின் கட்டமைப்பின் வளர்ச்சியில் பாரிய செல்வாக்கு செலுத்தும் ஊடகவியலாளர்கள் இவ்வாறு புறக்கணிக்கப்பட்டது தொடர்பில் ஆழ்ந்த கவலை வெளியிடப்பட்டுள்ளது.


தமிழ் மொழியை உலகமெல்லாம் கொண்டு சென்று இன்று வரை அதற்கு உயிரூட்டிக்கொண்டிப்பவர்கள் ஊடகவியலாளர்கள் என்பதை விழா ஏற்பாட்டாளர்கள் கருத்தில்கொள்ளவேண்டும் என்பதே எங்கள் அவா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக