வெள்ளி, 23 ஜூலை, 2010

ஐ.நா. நிபுணர் குழு தன்னிச்சையாகவே நியமிக்கப்பட்டது -வம்புகல

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் நியமித் துள்ள நிபுணர்குழு, முறைப்பாடுகள் எதுவும் செய்யப்படா மலேயே நியமிக்கப்பட்டுள்ளது. பான் கீமூன் அதனைத் தன் னிச்சையாகவே அமைத்துள்ளார். இதுகுறித்து நாம் ஐ.நா. சபையில் அங்கம் வகிக்கும் பல
நாடுகளுடன் பேச்சு நடத்தி வருகிறோம்.
முன்னர் எமது நாட்டுக்கு எமக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வியுற்றது உங்களுக்கு ஞாபக மிருக்கலாம்; ஏன் எல்லோருக்குமே ஞாபகமிருக்கும்.
இவ்வாறு தெரிவித்தார் அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத் துறை அமைச் சருமான கெஹலிய ரம்புக்வெல.
தகவல் திணைக்களத்தில் அமைச் சரவை முடிவுகளை வெளி யிடும் செய்தியாளர் மாநாடு நேற்று நடைபெற்ற வேளை அமைச்சர் இதனைச் சொன்னார்.
பாதுகாப்புச்சபை அல்லது மனித உரிமைகள் தொடர்பான ஆணையம் போன்ற ஐ.நா. அமைப்புகளின் சிபார்சு, முறைப் பாடுகளின் பேரில் ஐ.நா. செயலாளர் நாயகம் இது@பான்ற குழுவை நியமிக்கலாம். சிபார்சு, முறைப்பாடுகள் எதுவுமின்றி அவர் தன்னிச்சையாகவே இந்தக் குழுவை நியமித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து அரசு ஐக்கியநாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளுடன் பேச்சு நடத்தி வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் எமக்கு எதிராக ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானமும் தோல்வியுற்றது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் நியமித்துள்ள நிபுணர் குழு தொடர்பாக அரசு எல்லை மீறி எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை; உரியமுறையிலே@ய எதிர்ப்புத் தெரிவிக்கின்றது. இது விடயத்தில் அரசு எல்லை மீறிச் செயற்படவில்லை என்பதை இங்கு ஆணித்தரமாகக் கூறவேண்டும்.
இலங்கையின் யுத்தக்குற்றம் தொடர்பாகத் தமக்கு ஆலோ சனை வழங்க ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்துள்ள மூவர் அடங்கிய நிபுணர் குழுவுக்கு மேலதிகமாக எட்டுப்பே ரைக் கொண்ட மற்றும் ஒரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசின் நிலைப்பாடு என்ன என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதுஅமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக