வெள்ளி, 23 ஜூலை, 2010

மஹிந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவன் பொலிசாரினால் அடித்து கொலை...

பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒருவர் பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் நேற்று வியாழக்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்தது.



றுகுணு பல்கலைக்கழகத்தின் மூன்றாம் வருட மாணவனான சுசந்த அருண பண்டார என்ற மாணவன் கடந்த ஜுன் மாதம் 18ஆம் திகதி பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து பொலிஸாரினால் தாக்கப்பட்டதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் உதுல் பிரேமரட்ன தெரிவித்தார்.


குறித்த மாணவன் தாக்குதலுக்குள்ளான நிலையில் ஏற்பட்ட காயங்களினால் அவதிப்பட்டதாகவும் இவர் கடந்த ஒரு மாதகாலமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாகவும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கூறினார்.


குறித்த மாணவன் ஒன்றரை நாள் வரையில் சுய நினைவற்ற நிலையில் தியத்தலாவ வைத்தியசாலையில் 4 நாள்கள் வரையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பின்னர் அங்கிருந்து பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் உதுல் பிரேமரட்ன குறிப்பிட்டார்.


கடந்த ஜூன் மாதம் 18ஆம் திகதி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்த நிலையில் பல்கலைக்கழகம் மூடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாணவர்கள் தமது உடமைகளை எடுப்பதற்காக பல்கலைக்கழக விடுதிக்கு சென்றபோதே தாக்குதலுக்கு உள்ளானதாகவும் அவர் மேலும் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக