வெள்ளி, 23 ஜூலை, 2010

இன்றைய நாளில் எல்லா இழப்புகளையும்,தோல்விகளையும்.சோகங்களையும்,மனதில் நிறுத்தி நாம் கொண்ட இலட்சியத்தை வெல்ல மாவீரர்கள் ,மக்களின்,பெயரால் உறுதி எடுத்து கொள்வோம் .......

நெருப்பாய் எரிந்தது எங்கள் தேசம்
நெஞ்சம் முழுதும் அவலத்தின் சோகம்
நேற்றுப் போல் இன்றும் நினைவு
தோற்றுப் போனதாய் தேம்பல்கள்
தேடியழித்த சிங்களம் அதில்
தேய்ந்து கிடக்கிறது தமிழினம்



கறுப்பு ஜுலையை நெருடும் நெஞ்சுடன்
நினைவில் கொள்கின்றோம் இன்று
காய்ந்து போய் நினைவுகளை மீட்ட
கடினப்பட்ட பாதைகள் வழியே பயணம்


நெருப்பாய் எரிந்தது எங்கள் தேசம்
அன்று நிறுத்து என்றிட யாருமில்லை
தொடுத்தான் தலைவன் போர்
தொல்லை தந்திட யாருமில்லை


Add caption
வென்ற கழிப்பில் இன்று கறுப்பு நாட்கள்
தமிழன் பூமியேங்கும் சவக்கிடங்குகள்
தமிழன் வாழிடமெங்கும் அவலங்கள்
அன்று ஒரு கறுப்பு ஜுலை...


இன்று குறிப்பெடுத்து கொள்ள முடியா
கருமை நிறை நாட்கள்...!


கறுப்பு ஜுலைகள் எங்கள் சாவு
கணக்கெடுத்திட யாரோ இருந்தனர்...
இன்று செத்தவர் பற்றிய
சோகச் செய்திகள் கூட இல்லை...!


கடலுக்குள் மீனுக்கு இரையாக்கி
கரைந்து போகிறது உறவுகள் உடல்கள்
பொய்மையின் விம்பம் நேற்றும்
இன்றும் யாரையும் யதார்தத்தை
யாசிக்க விட்டதில்லை...!


கறுப்பு ஜுலையில் தெருவெங்கும்
செத்துகிடந்த ஆயிரக்கணக்கானோருக்காய்
அகிலமெங்கும் குரல் தந்தது..


நெருப்பாய் எரிந்த முள்ளிவாய்க்காலில்
நெஞ்சமிம்மிட இந்திய இலங்கை
அரசு கொன்று குவித்த பல்லாயிரம்
மனிர்களுக்காய் என்ன செய்தது உலகம்...!


மன்னிக்க முடியாத இரு நாடுகளும்
அரசுகள் என்ற பெயரில்
ஐ. நாவுக்கே பாடம் சொல்லி கொடுக்குது


உலக வரைபடத்தில் இரத்த கறை படிந்து
உருக்குலைக்கப்பட்ட எம் தேசத்தின்
உண்மைக்காய் எழுந்திருப்போம்...


கரு மேகம் புடை சூழ மழை வரும் என்று
கடவுளை நம்பி காத்திருப்பதை விடுப்போம்
அதியம் ஒன்று நடந்து அது ஈழம்
பெற்றுத்தரும் என்பதையும் மறப்போம்


நாமே வீரர்களாவோம்
நாமே பொறுப்பாளர்களாவோம்
நாமே போராடுவோம்...!


நாமே ஈழம் வெல்வோம் அதை எம்
தலைவன் கரத்தில் கொடுப்போம்..!


கறுப்பு ஜுலையில், கறுப்பு நாட்களுக்குள் சிதைக்கப்ட்ட உறவுகளுக்கு கண்ணீர் வணக்கங்கள். மீண்டும் எழுவோம்.. வெல்வோம் என்று உணர்ச்சி பட கத்திட ஆசை எனினும் உங்கள் வலிகளை அவை ஆற்றிட போவதில்லை....!


- நிதர்சன் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக