வெள்ளி, 18 ஜூன், 2010

மத்திய கிழக்கில் யுத்தம் ஏற்படக் கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளது!

மத்திய கிழக்கில் யுத்தம் ஏற்படக் கூடிய சாத்தியங்கள் உருவாகியுள்ளதென சிரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.



அண்மையில் இஸ்ரேலிய படையினர், காஸா கடற்பரப்பில் பலஸ்தீனனர்களுக்கு நிவாரணங்களை ஏற்றிச் சென்ற கப்பல் மீது நடத்திய தாக்குதலே இந்த பதற்ற நிலைக்கான காரணம் என சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாட் தெரிவித்துள்ளார்.


பிராந்திய யுத்தம் ஒன்று ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் சிரியா கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


எவ்வாறெனினும், தற்போதைய இஸ்ரேல் அரசாங்கத்துடன் எந்தவிதமான சமாதான பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.


நிவாரணக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக பிராந்திய சமாதான முனைப்புக்களுக்கு பெரும் சவால் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


ஒரு தலைப்பட்சமான தீர்மானங்களை மேற்கொள்ளும் இவ்வாறான அரசாங்கத்துடன் எவ்வாறு சமாதானப் பேச்சுக்களை முன்னெடுப்பதென அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


லெபனானில் இயங்கி வரும் ஹஸ்புல்லா அமைப்பிற்கு தாம் ஆயுதங்களை அனுப்பி வைத்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக