வெள்ளி, 18 ஜூன், 2010

ஈழத்தமிழர்களை அழிக்க இலங்கைக்கு உதவிய இந்தியாவிற்கு ஆரம்பமாகிறது சாட்டையடி !

இந்தியாவானது இலங்கையை தனது சிறிய தங்கையைப் போன்று கவனிக்க வேண்டுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த உணர்வை தற்போது இங்குள்ள (இலங்கையில்) பலர் பகிர்ந்துகொள்ளவில்லை என்று தோன்றுகிறது. அச்சுறுத்தலளிக்கும் பூதாகரமான ஒன்றாகவே இந்தியா நோக்கப்படுகிறது.



இவ்வாறு இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அப்பத்திரிகையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;இருதரப்பு வர்த்தக உடன்படிக்கை மற்றும் சிறுபான்மைக் கட்சிகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தைக்கு திட்டமிடுதல் என்பன தொடர்பாக அரசியல் கட்சிகளிடமிருந்தும் ஊடகங்களிடமிருந்தும் தற்போது இந்தியாவானது அதிகளவிலான எதிர்ப்புணர்வைப் பெற்றுவருகிறது.


ஞாயிற்றுக்கிழமையன்று நிக்கோபார் தீவுகளுக்கப்பால் இடம்பெற்ற பூகம்பத் தாக்கம் இலங்கையின் சில பகுதிகளில் உணரப்பட்டது. அந்த வழியில் ஆசிரியர் தலையங்கங்கள் வந்து கொண்டிருக்கின்றன.விமர்சிப்போரில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் விமல் வீரவன்சவும் உள்ளடங்கியுள்ளார். அவரின் மிகக் கவனமாகப் பராமரிக்கப்படும் தாடியைப் போன்றே இந்தியாவிற்கு எதிரான கருத்துகளும் கூர்மையாக உள்ளன. பரந்துபட்ட பொருளாதார பங்குடைமை (சீபா) உடன்படிக்கையூடாக இலங்கையை காலனித்துவப்படுத்த இந்தியா விரும்புகின்றதென்று அவர் கூறியுள்ளார். புதுடில்லியுடன் சீபாவைத் தவிர, ஏனைய உடன்படிக்கைகளை அவரின் தலைவர் கைச்சாத்திட்ட தினத்தில் சாதுரியமாக இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.


மார்க்சிஸ்ட்டுகளான ஜே.வி.பி.யும் இந்தியாவிற்கு எதிரான தனது கருத்துகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. தனது அரசியல்,பொருளாதார,கலாசார விஸ்தரிப்பு வாதத்திற்கு இலங்கையை உட்படுத்த இந்தியா விரும்புகின்றது என்று ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா சண்டேலீடர் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.


அதன் பின்னர் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.கட்சியின் ரவி கருணாநாயக்க தெரிவிக்கையில்; இந்தியாவானது குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்கி இலங்கையில் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்ததெனக் கூறியுள்ளார். அரசியல் தீர்வு தொடர்பாக தமிழ்,முஸ்லிம் கட்சிகளுடன் இந்தியா நேரடியாக பேசத் திட்டமிட்டிருப்பதாக வெளியான அறிக்கைகள் தொடர்பாகவே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.


பத்திரிகைகளும் இதனைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டுள்ளன. "இந்தியர்கள் இப்போதும் தமது தெற்கு அயலவர் மீது விரல்களைப் பொருத்தமான இடத்தில் வைத்துள்ளனர்... நீங்கள் இந்தியாவுக்குப் போகும்போது அவர்கள் இந்த லட்டுக்கள்,பூந்திஜிலேபி,குலாப்ஜாம் என்பனவற்றை உங்களுக்கு வழங்குவார்கள். "ஜாக்கிரதை மகிந்த என்று ஆங்கில வாரப் பத்திரிகையான சண்டேரைம்ஸ் ஜூன் 6 இல் தீட்டியுள்ள ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.


விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை வடபகுதி கிளர்ச்சிக்கும் கணிசமானளவும் தாராளமான விதத்திலும் இந்தியாவின் உதவி கிடைத்திராவிடின், இந்த இடம்பெயர்ந்த மக்கள் இவ்வாறான மோசமான துன்பத்திற்கு உள்ளாகியிருக்கமாட்டார்கள் என்பதே இந்த விடயத்திலுள்ள உண்மையாகும் என்பது இடம்பெயர்ந்த மக்களுக்கான இந்தியாவின் உதவி தொடர்பாக சண்டேரைம்ஸின் பிரதிபலிப்பாகும். ராஜபக்ஷ நாடு திரும்பிய பின் இந்தக் கருத்தை சண்டேரைம்ஸ் வெளியிட்டிருந்தது.
ஆசிரியர் தலையங்கங்களில் விரல்களைப் பொருத்தமான இடத்தில் வைத்து மீட்டுதல் (ஊடிணஞ்ஞுணூடிணஞ்) என்ற வார்த்தையானது வழமையாகப் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால், இந்தியாவைப் பற்றிய உணர்வை பலர் எவ்விதம் இங்கு கொண்டுள்ளனர் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. சகோதரத்துவம் தொடர்பாக இது எதனையும் செய்யுமென்று தோன்றவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக