வெள்ளி, 18 ஜூன், 2010

செய்தித்துளிகள்



வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு ஐரோப்பிய ஒன்றியம் 60 மில்லியன் யூரோ நிதி
-----------------------------------
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளுக்காக, 60 மில்லியன் யூரோக்கள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இந்த அறிக்கையை விடுத்துள்ளனர்.


இந்த நிதி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அபிவிருத்திகளுக்கான குறுங்கால செயல் திட்டங்களை நோக்காக கொண்டு பயன்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை தொடர்பிலான 2007 ஆம் ஆண்டு தொடக்கம் 2013 ஆம் ஆண்டு வரையிலான செயல் திட்டம் ஒன்று நடைமுறைப்பத்தப்பட்டுள்ளது.


இந்த நிலையில் தற்போது வழங்க தீர்மானித்துள்ள நிதியின் மூலம், 2011 ஆம் ஆண்டு தொடக்கம் 2013 ஆம் ஆண்டு வரை யிலான செயல் திட்டம் ஆரம்பிக்கப்படவு ள்ளது.


வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் வாழ் வாதார மேம்பாட்டு வாய்ப்பு அதிகரிப்பு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக இந்த செயல் திட்டம் வடிவமைக்கப்ப ட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வடக்குக் கிழக்கு மாகாணத் தேர்தல்களை ஒன்றாக நடத்த அரசாங்கம் ஆலோசனை? – கிழக்கு மாகாண சபை விரைவில் கலைப்பு!
----------------------------------------------------------------------------------------------------------
வட மாகாண சபைத் தேர்தலுடன் கிழக்கு மாகாண சபைத் தேர்தலையும் நடத்துவது குறித்து அரசு ஆராய்ந்து வருவதாக அரச உயர்மட்ட வட்டாரத்தைச் சேர்ந்த சிரேஷ்ட அரசியல்வாதி ஒருவர் தெரிவித்துள்ளார்.


கிழக்கு மாகாண சபையின் ஆயுள்காலம் முடிபடைவதற்கு மேலும் சில வருடங்கள் இருந்தாலும் அதனை முன்னதாகவே கலைத்து விரைவில் நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலுடன் கிழக்கு மாகாண சபைத் தேர்தலையும் நடத்துவது குறித்து அண்மையில் அரச தரப்பில் ஆராயப்பட்ட தாக அவர் மேலும் கூறினார்.


தற்போது நாட்டில் உள்ள அனைத்து மாகாண சபைகளும் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. கிழக்கு மாகாண சபையும் அரசின் கட்டுப் பாட்டுக்குள் இருந்தாலும் மாகாண அமைச்சர்கள் தொடர்பிலும் அதன் செயற்பாடுகள் குறித்தும் அரசு அதிருப்தியடைந்துள்ளது.


ஆகவே இந்த மாகாண சபையைக் கலைத்து விட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நேரடி அங்கத்தவர்களைத் தேர்தல் களத்தில் நிறுத்தி அதன் மூலம் கிழக்கு மாகாண சபையை முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதே அரசின் திட்டம் என்றும் அவர் தெரிவித்தார்.


இதேவேளை கிழக்கு மாகாண சபை அமைக்கப்பட்டதிலிருந்து அந்த மாகாணத் தின் ஆளுநருக்கும் அமைச்சரவைக்கும் இடையில் பலத்த கருத்து மோதல்கள், இழுபறிகள் இடம்பெற்று வருகின்றன. அமைச்சரவை முடிபுகளையோ அமைச்சர்களின் தனிப்பட்ட தீர்மானங்களையோ நடைமுறைப்படுத்துவதில் ஆளுநர் தடையாக இருப்பதாகக் குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. கிழக்கு மாகாண ஆளுநரை உடனடியாக இடம்மாற்ற வேண்டும் எனக் கிழக்கு மாகாண சபை அமைச்சரவை ஜனாதிபதி மகிந்த ராஜபக் சவுக்குக் கூட்டாக வேண்டுகோள் விடுத்திருந்தும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.


மலேசியாவைத் தளமாகக் கொண்டு புலிகளின் செயற்பாடுகள் ஆரம்பம் – மலேசிய உள்துறை அமைச்சர் அச்சம்
------------------------------------------------------------------
விடுதலைப்புலிகள் அமைப்பில் எஞ்சி யுள்ளவர்கள் மலேசியாவைத் தமது தளமாகப் பயன்படுத்திப் புதிதாக ஆள்சேர்ப்புப் பணி களை மேற்கொண்டு வருவதாக மலேசிய உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நிஷா முதீன் ஹூசேன் தெரிவித்துள்ளார்.


நிதி சேகரிப்பு, புலனாய்வுத் தகவல்களை சேகரித்தல் போன்ற நடவடிக்கைகளில் இவர் கள் ஈடுபட்டுள்ளனர்.இந்த நடவடிக்கைகளுடன் மேலும் ஒரு அமைப்பும் சம்பந்தப்பட்டுள்ளது.


மலேசியா வில் உயர் கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் மாணவர்களையும் புலிகளின் செயற் பாட்டாளர்கள் தமது பணிகளில் இணைத் துக் கொண்டுள்ளனர் எனவும் ஹூசேன் கூறியுள்ளார்.


அதேவேளை புலிகளின் சிரேஷ்ட தலை வர்கள் சிலர் மலேசியாவில் தஞ்சமடைந் துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது என மலேசிய பொலிஸ் மாஅதிபர் மூஸா ஹசன் கூறியுள்ளார்.இவர்களைக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக