புதன், 28 ஜூலை, 2010

5வது நாளாக சிவந்தன்நடை பயணத்தைத் தொடருகின்றார்....

இலங்கை அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிஇலங்கையைப் புறக்கணிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து
ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.பிரான்சின் கடற்கரையான கலையை கடந்த திங்கட்கிழமை இரவு சென்றடைந்திருந்த அவர், நேற்று காலை முதல் இரவுவரை 51 கிலோமீற்றர்கள் நடந்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஓய்வு எடுத்துக்கொண்ட அவர், இன்று காலை முதல் ஐரோப்பிய நேரம் பிற்பகல் 2:00 மணிவரை 21 கிலோமீற்றர்கள் தூரம் நடந்து சென்றுள்ளார்.


சிவந்தன் பாரிஸ் நகரைச் சென்றடைய இன்னும் 230 கிலோமீற்றர்கள் இருப்பதுடன், அங்கிருந்து ஜெனீவா நோக்கி 600 கிலோமீற்றர்கள் நடந்து செல்ல வேண்டியுள்ளது.சுவிற்சர்லாந்து ஜெனீவாஐ.நா மனித உரிமைகள் சபை முன்றலை எதிர்வரும் 6ஆம் நாள் சிவந்தன் சென்றடைவார் என கணிக்கப்பட்டுள்ளதால், அன்று பிற்பகல் 2:00 மணிக்கு மாபெரும் எழுச்சிக் கவனயீர்ப்பு ஒன்றுகூடலும் மனுக் கையளிப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக