புதன், 28 ஜூலை, 2010

புத்தள பொலிஸ்நிலையத்தில் இராணுவ வீராங்கனை மீது பாலியல் வல்லுறவு!!

இராணுவத்திலிருந்து தப்பியோடிய இராணுவ வீராங்கனை ஒருவர் புத்தள பொலிஸ் நிலைய அதிகாரிகளால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் புத்தள பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடொன்றை செய்வதற்கு சென்ற மேற்படி இராணுவ வீராங்கனை மீதே குறித்த பொலிஸ் நிலையத்தின் மூன்று பொலிஸ் அதிகாரிகள் தகாத முறையில் நடந்துகொண்டதுடன் அவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.


இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது:


குறித்த பெண் கஜபா ரெஜிமண்ட் பிரிவில் சேவையாற்றிய இராணுவ வீராங்கனை. காலி, உடுகமவைச் சேர்ந்த இவர் இராணுவத்திலிருந்து தப்பிச்சென்று புத்தளவில் உள்ள தனது காதலரது உறவினர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.


இந்நிலையில் கர்ப்பிணியாகிய அவரை கர்ப்பத்தை கலைக்குமாறு அவரது காதலர் வற்புறுத்தியதையடுத்து அதற்கு உடன்படாததால் இருவருக்குமிடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.


இதனையடுத்து புத்தள பொலிஸ் நிலையத்தில் குறித்த இராணுவ வீராங்கனை முறைப்பாடு செய்துள்ளார். இதனை விசாரித்த பொலிஸார் இருவருக்கும் இடையில் சமரசத்தை ஏற்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.


இருப்பினும் காதலரும் அவரது பெற்றோரும் சேர்ந்து நள்ளிரவில் அப்பெண்ணை வீட்டை விட்டு துரத்தியுள்ளனர். அதனால் உதவி பெறும் முகமாக மீண்டும் அப்பெண் புத்தள பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.


அந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு உதவுவதாக வாக்குறுதியளித்த மூன்று பொலிஸ் javascript:void(0)உத்தியோகஸ்தர்களும் அப்பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளனர்.


பின்னர் இரண்டு நாட்கள் கழித்து குறித்த இராணுவ வீராங்கனையை இராணுவத்திலிருந்து தப்பியோடிய குற்றச்சாட்டின் பேரில் வெல்லவாய நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியுள்ளனர்.


பாதிக்கப்பட்ட குறித்த பெண் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் தியத்தலாவ இராணுவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில் புத்தள பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு எதிராக குறித்த இராணுவ வீராங்கனை இராணுவப் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார். இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாகவே விசேட பொலிஸ் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக