புதன், 28 ஜூலை, 2010

அமெரிக்கா கடற்கரையில் தமிழர்கள் கைது!

அமெரிக்க பொலிஸார் சட்டவிரோத குடியேற்றவாசிகள் என சந்தேகிக்கப்படும் 6 இலங்கையர்களை செவ்வாய் காலை கைது செய்துள்ளனர். புளோரிடா மாநிலத்தின் பாம் பீச் நகரில் காலை 6.40 மணியளவில் ஈரமான ஆடையுடன்
மேற்படி நபர்கள் வீதியில் நடந்து சென்றதை அவதானித்த பொலிஸார் அந்நபர்களை கைது செய்து எல்லைக் காவல்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.


முழங்கால் வரை அவர்களின் கால்கள் நனைந்திருந்ததால் அவர்கள் படகில் அழைத்துவரப்பட்டு கரையோரத்தில் இறக்கிவிடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் நம்புகின்றனர். எனினும் சந்தேகத்திற்கிடமான படகுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.




இந்நபர்கள் அனைவரும் 20-40 வயதானவர்கள் எனவும் அவர்கள் ஆரோக்கியமான நிலையில் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை மற்றும் அமெரிக்க நாணயத்தாள்கள் அவர்களிடம் இருந்ததாகவும் அவர்களால் ஆங்கிலம் பேசமுடியவில்லை எனவும் பொலிஸார் கூறுகின்றனர். அவர்களிடம் பை எதுவும் காணப்படாத போதிலும் செல்லிடத் தொலைபேசிகளை வைத்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக