புதன், 28 ஜூலை, 2010

ரம்புகலவின் குடிபோதை உளறல் பேட்டி..

வடக்கில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் தொடர்பாக அறிய விரும்புபவர்களுக்கு அங்கு நேரடியாகச் சென்று பார்க்க முடியும். அதற்கு நாம் தடைவிதிக்கப் போவதில்லை என ஊடகத் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
ஆனால் பல அரச சார்பற்ற நிறுவனங்களையும் தனிப்பட்டவர்களையும் இராணுவத்தினர் வட பகுதிக்கு செல்ல இன்னமும் தடை விதித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. அண்மையில் அமெரிக்காவில் இருந்து தமிழ் அரச சார்பற்ற நிறுவன பணியாளர்கள் அங்கு பாடசாலைகளில் ஆங்கில மற்றும் கல்வி நடவடிக்கையில் ஈடுபட முயற்சித்த போது விமான நிலையத்தில் வைத்தே திருப்பப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


ஆனால் ரம்புக்வெல யாரும் செல்லலாம் என்று கதைவிடுகின்றார். அவர் மேலும் கூறுகையில்


“இதுவரை 2 லட்சத்து 87 ஆயிரத்து 393 பேர் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர். ஒரு வருடத்திற்குள் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் வரை முழுமையாக அனைத்து வசதிகளுடனும் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.


நாளொன்றில் 700 முதல் 750 பேர் வரை மீள்குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். இன்னும் 50 லட்சம் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படாமல் உள்ளன. இப் பிரதேசங்களில் மக்களை மீளக்குடியமர்த்துவது சட்டரீதியான பிரச்சினையாகும். கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்பட்டதன் பின்னரே மக்களை இப்பிரதேசங்களில் குடியமர்த்த முடியும்.


நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு இந்திய அரசாங்கம் உதவி செய்தபோதும் அரசாங்கம் 860 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்களைக் கொள்வனவு செய்து இப்பணியில் ஈடுபடுகின்றது. அரச சார்பற்ற நிறுவனங்கள் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுபட்டாலும் இலங்கை இராணுவமே 95 வீதமான பணிகளை மேற்கொண்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக