புதன், 28 ஜூலை, 2010

ஐ ,நா செயலரின் பதவி நீடிப்புக்கு மஹிந்த அரசு எதிர்ப்பு ..

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனின் இரண்டாம் தவணை பதவி நீடிப்புக்கு இலங்கை தமது எதிர்ப்பை வெளியிடவுள்ளது.
அத்துடன், தமது எதிர்ப்புக்கு ஆதரவாக
இந்தியா, ரஸ்யா,பிரேசில்,சீனா போன்ற நாடுகளையும் சேர்த்துக்கொள்ள இலங்கை எதிர்ப்பார்ப்பதாக அரசாங்க அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கான பிரசாரங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள் குறித்த அரசாங்கங்களுடன் நடத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பான் கீ மூனின் பதவிக்காலம் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.
இந்தநிலையில் அவர் மீண்டும் தெரிவு செய்யப்படுவதற்கான தகுதியை கொண்டிருக்கிறார்.
பான் கீ மூனுக்கு பெரும்பாலும் மேற்கத்தைய நாடுகள் தமது ஆதரவை வெளியிடும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் அவர் மேற்கத்தைய நாடுகளுடன் இணைந்த செயற்பாட்டை கொண்டிருந்தமையாகும்.
இந்தநிலையில் இலங்கை அரசாங்கம், பான் கீ மூனுக்கு எதிராக பிரசாரங்களை மேற்கொள்ளும் போதே இலங்கை அரசாங்கத்திற்கான சர்வதேச ஆதரவை தெரிந்துக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் உயிர்களை காவுகொண்ட வன்னி யுத்தம் தொடர்பில் விசாரணைகளை நடத்த பான் கீ மூன் நிபுணர் குழு ஒன்றை நியமித்தமையே அவர் மீது இலங்கை கொண்டுள்ள வெறுப்புக்கு காரணமாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக