வெள்ளி, 10 டிசம்பர், 2010

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை????

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, தாம் இரண்டாம் தவணையிலும் அதே பதவியில் நீடிக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக, இன்னர் சிற்றி பிரஸ் குற்றம் சுமத்தியுள்ளது. இதன் அடிப்படையிலேயே அவரது தற்போதைய செயற்பாடுகள் காணப்படுவதாக அது தெரிவித்துள்ளது.

நோபல் பரிசுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சீனாவின் எழுத்தாளர் லுயி சியபோ, சீனாவில் சிறை வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. எனினும் ஐக்கிய நாடுகள் சபை இது தொடர்பில் எந்த எதிர்ப்பையும் வெளிப்படுத்தவில்லை.
பொது செயாலாளர் பான் கீ மூனும், மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையும் இது தொடர்பில் எந்த கருத்தை வெளியிடவில்லை என இன்னர் சிட்டி பிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கிடையில் இரண்டாம் தவணை பதவிக்காலத்தையும் தக்க வைத்துக் கொள்ள பொது செயாலாளர் பான் கீ மூன் ஆர்வம் காட்டி வருகின்றமை ஏற்கனவே வெளியான செய்தி.
அதே போன்று தற்போது நவநீதம்பிள்ளையும் தமது பதவிக்காலத்தை நீடித்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்களை மேற்கோள்காட்டி, இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.
அவர்கள் இருவரும், நோபல் பரிசுக்கு அறிவிக்கப்பட்ட எழுத்தாளரை சிறையில் இருந்து சீனா விடுவிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தினால், இரண்டாம் முறையும் பதவியைப் பெற்றுக் கொள்வதில் சீனாவின் ஆதரவை பெற்றுக் கொள்ள முடியாது போகும். இதன் காரணமாகவே நவநீதம்பிள்ளையும், பான் கீ மூனும் இது தொடர்பில் மௌனம் சாதித்து வருவதாக கூறப்படுகிறது.
இன்று ஒஸ்லோவில் நடைபெறவுள்ள நோபல் பரிசு வழங்கும் நிகழ்விலும் அவர்கள் இருவரும் கலந்து கொள்ளப் போவதில்லை என தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் ஒஸ்லோ நிகழ்வுக்கு தமக்கு அழைப்பு விடுவிக்கப்படவில்லை என நவநீதம்பிள்ளை தரப்பு தெரிவித்துள்ளது.
தென்னாபிரிக்காவை சேர்ந்த நவநீதம்பிள்ளை தமிழராவார். அவர் கடந்த காலங்களில் இலங்கை அரசாங்கத்தின் பல்வேறு யுத்த குற்றங்கள் தொடர்பிலும், மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பிலும் விசாரணை நடத்த பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்து வந்தார்.
எனினும் தற்போது இலங்கைக்கு எதிரான பல ஆதாரங்கள் வெளியாகியுள்ள போது, அவை தொடர்பிலோ அல்லது இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக எவ்வித கருத்துக்களையும் நவநீதம்பிள்ளை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதே கூத்தை சனல் – 4 உரிய பணத்தை சிங்கள பேரினவாதிகளிடம் பெற்றுக் கொண்டு அடக்கி வாசிக்கும் நாளும் வரலாம் என்பதை மறக்கலாகாது. சிங்கள பேராயர் மல்கம் ரஞ்சித் வன்னிப் படுகொலைகளை கண்டிக்காமல் மகிந்த ராஜபக்ஷவை புகழ்ந்த நிகழ்வு மதவாதிகளின் கபட நாடகங்களை உணர்த்துவது போல மேலும் பல நாடகங்கள் அரங்கேறும் என்பதும் கவனிக்கத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக