வெள்ளி, 10 டிசம்பர், 2010

அணு குண்டு தயாரிக்கும் முயற்சியில்பர்மா!

பர்மாவில் உள்ள சர்வாதிகார ஜிந்தா ஆட்சியாளர் இரகசியமான முறையில் அணுகுண்டு, ஏவுகணைகள் போன்றவற்றை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. பர்மாவின் அடந்த காட்டுப்பகுதியில் நிலத்தடியில் மிகக் கவனமாக உருவாக்கப்பட்ட கட்டிடப்பகுதியில்
இந்த முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டுள்ளார்கள். இவர்களுக்கான அணு குண்டு உருவாக்க தொழில் நுட்பத்தை வடகொரிய தொழில்நுட்பவியலாளர் வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க உளவுப் பிரிவு அறிக்கைகளின் பரிமாற்றத்தை மேற்கோள் காட்டி த கார்டியன் மேற்கண்ட செய்தியை வெளியிட்டுள்ளது.
இது இவ்விதமிருக்க இதுவரை காலமும் கைது செய்யப்படாத விக்கிலீக்ஸ் நிறுவனரை மேலை நாடுகளில் ஜனநாயகம் இப்போது மட்டும் எதற்காக கைது செய்தன என்று ரஸ்ய பிரதமர் புற்றின் கேள்வி எழுப்பியுள்ளார். ரஸ்யாவை ஜனநாயக மரபுகளற்ற நாடு என்றும் மாபியா ஸ்ரேற் என்றும் வர்ணிக்கும் மேலை நாடுகள் தாம் மட்டும் ஜனநாயகத்தை பேணுகிறார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். விக்கிலீக்ஸ் அதிபரின் கைது மேலை நாடுகளின் ஜனநாயக முகத்திரையைக் கிழித்துள்ளதாக அவருடைய கருத்து தெரிவிக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக