புதன், 10 பிப்ரவரி, 2010

தமிழர் தாயகத்தில் எண்ணை அகழிவில் ரஸ்ய நிறுவனம்

ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தாயகத்தில் எண்ணெய் வளத்தை அபகரிக்க சிறீலங்கா அரசு அவசரமாக மேற்கொள்ளும் முயற்சிகளில் பல நாட்டு நிறுவனங்களுக்கு எண்ணெய் படிமங்கள் உள்ளதாக கூறப்படும் பகுதிகளை குத்தகைக்கு விட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக இறுதியாக ரஸ்யாவின் மிகப் பெரிய எண்ணெய் அகழ்வு நிறுவனமான கஸ்பிரோமிற்கும் மன்னார் வளைகுடாவில் எண்ணெய் அகழும் அனுமதியை வழங்கி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே சீனா இந்தியா போன்றவை தமக்கான அகழ்வுப் பகுதிகளை வரையறுத்து ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ள நிலையில் தற்போது ரஸ்யாவும் அதில் இணைந்துள்ளது. முன்னர் அமெரிக்க அகழ்வு நிறுவனமாக சிவரோன் ரெக்சாக்கோவும் விருப்பத்தை தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக