புதன், 10 பிப்ரவரி, 2010

யாழ்ப்பாண இளைஞர்கள்

தமிழ் நாட்டு திரையுலகின் நடிகர் அஜித்குமாரின் ‘அசல்’ திரைப்படம், ஈழத் தமிழர்களின் “பண்பாட்டுத் தலைநகரான” யாழ்ப்பாணத்திலுள்ள மனோகரா திரை அரங்கில் வெள்ளிக்கிழமை திரையிடப்பட்டது. அப்போது திரையரங்கிற்கு முன்பாக யாழ்ப்பாண ரசிகர்கள் தேங்காய் உடைத்து, வெடிகொளுத்தி, ஆரவாரத்தில் ஈடுபட்டனர். மிக நீண்ட இடைவெளியின் பின்னர் அஜித்குமார் நடித்த “அசல்” திரைப்படம் யாழ். மனோகரா திரையரங்கில் திரையிடப்பட்டது. திரைப்படம் திரையிடப்பட்ட உடன் அங்கு திரண்டிருந்த ரசிகர்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த “அசல்” படத்தின் பதாகை (கட் அவட்) மீது மாலைகள் அணிவித்தனர். பின்னர் - தேங்காய்களை உடைத்து, பால் ஊற்றி அபிசேகம் செய்து, வெடி கொளுத்தி பெருத்த ஆரவாரத்தில் ஈடுபட்டனர். தமிழ் திரையுலகின் எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றபோது இது போன்ற செயல்களில் அந்தக் காலத்து யாழ்ப்பாண இளைஞர்கள் ஈடுபட்டதைச் சிலர் நினைவு கூர்ந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக