புதன், 10 பிப்ரவரி, 2010

இத்தாலியர்களும் ஜோதிடத்தில் அதிக மோகம்..

தங்களது எதிர்கால வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்வதற்காக இத்தாலியர்கள் ஜோதிடத்துக்காக அதிகம் செலவழிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் ஒரு ஆய்வு சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையால் பல ஆயிரம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இவர்கள் எல்லாம் மீண்டும் தங்கள் பிரச்னைக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஜோதிடர்களை நாடுகின்றனர். சீட்டு போட்டு பார்ப்பது, சோழியை உருட்டி எதிர்காலத்தை கணிப்பது என்பது போன்ற பல்வேறு முறைகளில் இவர்கள் தங்களின் எதிர்காலத்தை தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். கிட்டதட்ட 30 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொருவரும் ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை ஜோதிட பலனுக்காக செலவிட்டுள்ளனர். குறிப்பாக மிலன் மற்றும் லேசியோ பகுதியில் உள்ளவர்கள் அதிக அளவில் ஜோதிடம் பார்த்துள்ளனர். இதன் மூலம் இப்பகுதி ஜோதிடர்களுக்கு ஓராண்டில் 600 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் கிடைத்துள்ளது.இதில், 40 வயதுகளில் உள்ள நபர்கள் தான் ஜோதிடம் அதிகம் பார்த்துள்ளதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக