புதன், 10 பிப்ரவரி, 2010

தலைவர் பிரபாகரனின் மரண சான்றிதழை சிறீலங்கா தரவில்லை

முள்ளிவாய்க்காலில் இறுதிப்போரில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரும் தமிழீழ தேசியத் தலைவருமாகிய வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்துவிட்டதாக சிறீலங்கா இராணுவம் தெரிவித்திருந்தது. முன்னாள் இந்தியப்பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக் குற்றவழக்கில் தலைவர் வே.பிரபாகரன் பெயர் இருப்பதால் இந்திய அரசு, அவர் மீதான வழக்கை முடிக்க வேண்டும். எனவே, அவரது மரண சான்றிதழை தாருங்கள் என்று சிறீலங்காவிடம் கேட்டு வருகிறது. இறப்புச் சான்றிதழ் இதுவரை சிபிஐக்கு கிடைக்கவில்லை என்று மிஸ்ரா அண்மையில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் பேட்டி அளித்தபோது, தலைவர் வே.பிரபாகரனின் மரண சான்றிதழை சிறீலங்கா அரசு அனுப்பி விட்டதாக கூறினார். இந்நிலையில், தலைவர் வே.பிரபாகரனின் மரண சான்றிதழை சிறீலங்கா அரசு தரவில்லை என்று சி.பி.ஐ. இயக்குனர் அஸ்வினி குமார் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக