வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

தொடர்ந்தும் விளக்க மறியலில்,,

எல்லாளன் படை நடவடிக்கையான அனுராதபுரம் விமான படை விமான நிலைய தாக்குதலில் முக்கிய பொறுப்பாளராக இருந்தவர் இன்று அனுராத புரம் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டார். விசாரணைக்காக மேலும் தடுப்பு நாட்களை நீடித்து தருமாறு இரகசிய பொலிசாரினால் கோரப்பட்டதற்கு அமைவாக நாட்கள் நீடிக்கப்பட்டது. அனுராத புரம் தாக்குதலினை வெளியில் இருந்து படம் பிடித்து வன்னிக்கு சற்றலைட் தொலைபேசி ஊடாக அனுப்பியது.வன்னியில் இருந்து புலிகளின் விமானங்களை தாக்குதலிற்கு அனுப்புமாறு கட்டளை அனுப்பியது. வன்னியில் உள்ள தலைவர்களிடம் சற்றலைற் தொலைபேசி யூடாக தொடர்பினை மேற்கொண்டது ஆகிய குற்றசாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது. கிளி நொச்சியினை பிறப்பிடமாக கொண்ட இவர் இரகசிய தகவல்களின் அடிப்படையில் தடுப்பு முகாமில் வைத்து கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக