வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

இராணுவ ஆட்சி பிரகடனம். ......

நைஜீரியாவில் அதிபர் மமாடோ தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டுவிட்டதாகவும், இராணுவ ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கான சுப்ரீம் கவுன்சில் தலைவர் சாலு டிஜ்போ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் கையெழுத்திட்ட அறிவிப்பை இராணுவ அதிகாரி ஒருவர் தொலைக்காட்சியில் தோன்றி வாசித்தார். அரசு நிர்வாகம் அமைச்சர்களின் செயலர்கள் மற்றும் உள்ளாட்சி அரசு நிர்வாகிகள் மூலமாக நடத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இராணுவ ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தெருக்களில் இராணுவ வீரர்கள் ரோந்து சுற்றி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக